தொடர்புடைய செய்திகள்
- பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் பிரபல நடிகை
- பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை- ராமதாஸ் கண்டனம்
- எனது தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது: திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி ஆவேசம்..!
- தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- தேர்தலுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட காங்கிரஸ் முடிவு?
இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது- முதல்வர் மு,.க.ஸ்டாலின்
அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ''நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவில் கைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவோம். நாளைய இந்தியா நம் வசமே என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில் திமுகவின் பங்கு மகத்தானது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம், ஜன நாயகம் காப்பதில் உறுதியாகவுள்ள தோழமை கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
