1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 47 passengers tests positive in corona

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா !

விமான பயணிகள்
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,53,21,089 ஆக உயர்ந்துள்ளது.
 
இதனிடையே, டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 188 பயணிகளில் 20% பேருக்கு கொரோனா என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
About Writer
Sugapriya Prakash