ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா! – கன்னியாக்குமரியில் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றரை வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்புகள் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.
அவ்வாறாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் கன்னியாக்குமரி தோவாளையில் ஒன்றரை வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குழந்தையின் தாத்தாவுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.