1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:01 IST)

முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!

முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் காரணமாக டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். டெல்லியில் உள்ள நோயாளிகள் ஊரடங்கால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில்  இதய நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாக இதய சிகிச்சை வல்லுநர் பிரசாத் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.