1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 2026 january 1 important changes

2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை

2026
2026 ஜனவரி 1 முதல் இந்திய நிதித்துறையில் ஐந்து முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
 
பான்-ஆதார் இணைப்பு: நேற்றுடன் காலக்கெடு முடிந்த நிலையில், இணைக்கப்படாத பான் கார்டுகள் இன்று முதல் செயலிழக்கின்றன. இதனால் வங்கி பரிவர்த்தனை மற்றும் வரி ரீஃபண்ட் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
 
8-வது ஊதியக் குழு: இன்று முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் அமலாகின்றன. இது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பெரும் உயர்வை அளிக்கும்.
 
வாராந்திர கிரெடிட் ஸ்கோர்: சிபில் போன்ற மதிப்பெண்கள் இனி 15 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இதனால் கடன் தவணைகளை தவறவிட்டால் அது உடனடியாகப் பிரதிபலிக்கும்.
 
புதிய ITR படிவங்கள்: முன்கூட்டியே விவரங்கள் நிரப்பப்பட்ட  எளிமையான வருமான வரி படிவங்கள் அறிமுகமாகியுள்ளன. இது வரி தாக்கல் செய்யும் நேரத்தை குறைக்கும்.
 
சிலிண்டர் விலை: சர்வதேச சந்தை நிலவரப்படி  வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 என விற்பனை செய்யப்படும்.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எந்த கேஸ்னாலும் எங்ககிட்ட வாங்க!. போலி ஆவணம் மூலம் ஜாமின் வாங்கி கொடுத்த கும்பல்!..