வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 மார்ச் 2026 (12:35 IST)

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!
ஈரான் போருக்காக அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் தற்போது  சுமார் ரூ. 83 லட்சம் கோடி என்ற பிரம்மாண்ட எல்லையை தொட்டுள்ளது. இதனை இன்னும் உயர்த்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நிதி முன்னேற்றத்திற்காக அல்லாமல் ஈரானை தகர்க்கவே செலவிடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 
2023 முதல் இதுவரை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய ராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் சுமார் 2.8 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.
 
பணம் இருந்தாலும் போர்க்களத்தில் உடனடியாக வாங்க முடியாத 'இன்டர்செப்டர்' ஏவுகணை தடுப்பான்களின் பற்றாக்குறை அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக உள்ளது. 
 
ஒரு 'பேட்ரியாட்' ஏவுகணையைத் தயாரிக்க பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், போர் நீடித்தால் அமெரிக்காவின் சொந்த பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. 
 
பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'காஸ்ட் ஆஃப் வார்' புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நொடியும் இந்தச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது அமெரிக்க வரி செலுத்துவோரின் உழைப்பை சுரண்டுவதற்கு சமம் என்ற விமர்சனம் மேலோங்கி வருகிறது.
 
Edited by Siva