1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 10 dead in Maharashtra fire accident

சன்ரைஸ் மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி தீக்காயமுற்ற 10 பேர் பலி

மகாராஷ்டிரா
சன்ரைஸ் மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி தீக்காயமுற்ற 10 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அந்த மருத்துவமனையின் திடீரென தீ பற்றிக் கொண்டது. இதற்கிடையே கொரோனா நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் நடைபெற்றது.  
 
70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மும்பையில் உள்ள வேறு இரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 10 நோயாளிகள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் சிக்கி தீக்காயமுற்ற 10 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா தீ விபத்தில் 10 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பாரதியாருக்கு 150 அடி சிலை.. 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள்! – புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை!