1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (11:25 IST)

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி!

பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவியபடி உள்ளது. குறிப்பாக பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையிலும் 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் மால் ஒன்று உள்ளது. நேற்று இரவு 12.30 மணிக்கு அந்த மால் பகுதியில் திடீரென தீ பற்றிக் கொண்டது. அது மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது. இதற்கிடையே கொரோனா நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் நடைபெற்றது. 
 
70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மும்பையில் உள்ள வேறு இரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 10 நோயாளிகள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.