செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (11:10 IST)

மண்ணெண்ணெய் வைத்து முடி அழகு செய்ய முயற்சி! – யூட்யூப் வீடியோவால் விபரீதம்!

கேரளாவில் யூட்யூப் வீடியோ பார்த்து முடி அழகு செய்ய முயன்ற சிறுவன் தீப்பற்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இணைய வசதி வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மக்கள் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள யூட்யூப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமையல் செய்வது, செல்போன் சரி செய்வது போன்றவற்றை கூட பலர் யூட்யூபை பார்த்து செய்வது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது முடியை நேராக்க விரும்பியுள்ளான். இதற்காக பெற்றோர் வீட்டில் இல்லாதபோது யூட்யூப் வீடியோவை பார்த்த சிறுவன் அதில் மண்ணெண்ணெய் கொண்டு முடியை நேராக்கலாம் என்று சொல்லப்படவும் அதை முயன்று பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதால் சிறுவன் உயிரிழந்துள்ளான், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.