பாரதியாருக்கு 150 அடி சிலை.. 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள்! – புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 மார்ச் 2021 (12:45 IST)
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக புதுச்சேரி மக்களுக்கான தனது பல அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள் ஒரே தவணையாக ஏப்ரல் 6 நடைபெற உள்ளது, இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மக்களின் தேவைகள் குறித்து 50 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்டு பாஜக “உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லாமல் 5 லட்சம் வரை கடன்

புதுச்சேரிக்கு தனி பள்ளி கல்வி தேர்வாணையம் அமைக்கப்படும்

புதுச்சேரியில் பெண்களுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி

புதுச்சேரியில் உள்ளஎந்த ஆன்மீக தலங்களும் அரசால் நடத்தப்படாது

புதுச்சேரியில் பாரதியாருக்கு 150 அடி உயரத்திற்கு சிலை எழுப்பப்படும்

புதுச்சேரியில் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

இவ்வாறு மேலும் பல திட்டங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :