நெல்சன் வேற மாதிரி பண்ணியிருக்காரு...ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களின் கருத்து
ரஜினிகாந்த் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜெயிலர் 2 இன்று வெளியானது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை நெசல்சன் இயக்கியுள்ளார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் எதிர்பார்த்திருந்தனர். கார்ணம் தமிழில் எடுக்கப்படட் இரண்டாம் பாகங்கள் பெரிய வெற்றியை பெற்றதில்லை. சர்தார் 2, இந்தியன் 2 என சொல்லிகொண்டே போகலாம். ஆனல் ஜெயிலர் 2 அந்த விசயத்தை முறியடித்துள்ளது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்து கூறியுள்ளனர். அதில் சிலவற்றை இங்கே காண்போம்.
ஆண்டோ ஜெபின் என்வபர் தனது எக்ஸ் பக்கத்தில் அயே நெல்சா ஜெயிலர் 2 மரண மாஸ். இன்றுக்கும் என்றைக்கும் தலைவர் நிரந்தரம் என்றூ பதிவிட்டுள்ளார்.
வெங்கி ரிவிவ்யூ என்பவ்ர் தனது பக்கத்தில் வழக்கமான கதைக்களத்திலேயே படம் பயணிப்பதுடன், தொடக்கத்தில் சற்று மெதுவாக நகர்கிறது. ஆனால் கதைக்கான அடித்தளம் அமைந்த பிறகு, நெல்சனின் டிரேட்மார்க் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதோடு, அனிருத்தின் மிரட்டலான BGM-ல் சூப்பர் ஸ்டாருக்கான சில மாஸ் எலிவேஷன் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடர்கிறது. இதுவரை படம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியாகவும் செல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
கிரிஸ்டோபர் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு, படம் முழுக்க நெல்சனின் கலக்கலான காமெடி, மாஸான பிரிட்ஜ் சீக்வென்ஸ் மற்றும் டீக்கடை காட்சி, இன்டர்வெல் பிளாக் என அனைத்தும் வேற லெவல்! ???????? படம் செம என்கேஜிங்காக செல்கிறது. நெல்சன் வேற மாதிரி பண்ணியிருக்காரு... **ஹுக்கும்! ????** என்று பதிவிட்டுள்ளார்.

