ஜெயிலர் 2 முன்பதிவு: 16ஆம் தேதியே காத்தாடும் தியேட்டர்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கே இந்த நிலைமையா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியகவுள்ளது. இந்த நிலையில் ரஜினி படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உச்சத்தில் இருக்கும். ஆனால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான TicketNew-இல் சென்னை திரையரங்குகளில் அக்டோபர் 16 வெள்ளிக்கிழமைக்கான காட்சிகளுக்கான முன்பதிவு விவரங்களைப் பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தேவி சினிப்ளெக்ஸ், ஈகா சினிமாஸ் போன்ற முக்கியத் திரையரங்குகளில் அக்டோபர் 16-ஆம் தேதிக்கான காலை, மதியம் மற்றும் இரவு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் தாராளமாக கிடைக்கின்றன. தேவி திரையரங்கில் காலை 9:00 மணி காட்சிக்கு குறைந்த விலையிலான ரூ.54.34 மற்றும் ரூ.183.8 மதிப்பிலான டிக்கெட்டுகள் கூட இன்னும் நிரம்பாமல் 'AVAILABLE' என்றே காண்பிக்கின்றன.
வழக்கமாக ரஜினிகாந்தின் படங்கள் வெளியானால் முதல் சில நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் சூழலில், 'ஜெயிலர் 2' படத்தின் வெள்ளிக்கிழமை காட்சிகளுக்குத் தியேட்டர்கள் காத்தாடும் நிலை ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு மெதுவாக இருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

