1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. fans comment about mandaadi movie

மண்டாடி படம் எப்படி இருக்கு?.. ரசிகர்கள் சொல்வ்து என்ன?...

mandaadi
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. சூரி கதாநாயகன் கதையின் நாயகனாக நடித்த கடந்த சில படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலில் விளையாடக்கூடிய படகுப் போட்டியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்குனர் மதிமாறன் உருவாக்கியிருக்கிறார். இவர் வெற்றிமாறனிடம் சினிமா கற்றவர்.

இன்று காலை இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சூரியின் நடிப்பு அசத்தலாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். வெற்றிமாறனின் உதவியாளரான மதிமாறன் புகழேந்தி படத்தை சிறப்பாக இயக்கியிருப்பதாக கூறுகிறார்கள். சூரி மண்டாடி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பாக ஜி.வி பிரகாஷ் அசத்தலான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்..

படத்தில் வரும் ஃபிளாஷ்பாக் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் போர்.. மற்றபடி படம் விறுவிறுப்பாக செல்கிறது.. படத்தில் கணிக்க கூடிய சில காட்சிகளும் சில எமோஷனல் காட்சிகளும் படத்தின் பலவீனம்.. படகு போட்டி நடக்கும் காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.. இதுவரை தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திராத அனுபவம் இது’ என்றெல்லாம் கூறி வருகிறார்கள்
.
இப்படி மண்டாடி திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் ‘மண்டாடி படத்திற்கு கிடைட்துள்ள வரவேற்பு சூரி அண்ணனின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி’ என வாழ்த்தியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சமந்தாவின் நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு ரூ.1.5 கோடியா? அப்படி என்ன இருக்குது அந்த வைர மோதிரத்தில்?