1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
  4. actor soori sharing a flashack with goundamani

எதுக்குடா நடிக்க வரேன்னு கவுண்டமணி எட்டி உதச்சாரு!.. சூரி சொன்ன பிளாஷ்பேக்!...

soori
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகனின் நண்பனாக காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் சூரி. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தி பரோட்டா சூரியாக மாற்றியது.

அதன்பின், தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களிலும் கதாநாயகனாக நடித்து ஹீரோவாக புரமோஷன் ஆனார் சூரி. அதன்பின் கருடன், மாமன் ஆகிய இரண்டு படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. தற்போது தண்டாடி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்தான், நடிக்க வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை சூரி பகிர்ந்துள்ளார். ‘கண்ணன் வருவான் என்கிற படத்தில்தான் நான் முதன் முதலில் கவுண்டமணி அண்ணனுடன் ஒரு காட்சியில் நடித்தேன்.. கவுண்டமணி அண்ணன் வருவாரு.. ‘ஐயா தெய்வமே நீங்க எங்க ஊருக்கு வந்ததே போதும்யா’ என சொல்லி அவருடைய காலில் விழுந்து நான் கும்பிடணும்.. இதுதான் காட்சி..

நான் கேமரா எங்க இருக்குன்னு தெரியாம வந்து நிப்பேன்.. அவர் சொல்லிக் கொடுப்பாரு.. நான் மறுபடியும் வேற இடத்தில் வந்து நிற்பேன்.. இப்படியிஏ 7 டேக் போச்சு.. அவருக்கு கோவம் வந்துருச்சு.. ‘கேமரா தெரியாம எதுக்குடா நடிக்க வரே’ன்னு எத்தி ஒரு உதை விட்டார்.. பின்னாடி இருந்த தண்ணியில போய் விழுந்தேன்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
கவின் - நயன்தாரா நடித்துள்ள ஹாய்!.. முதல் நாள் வசூல் அப்டேட்!...