1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. soori talk about womens sppecial

சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி இல்லை.. பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி! – சூரி

சூரி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கி, தற்போது கதாநாயகனாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் சூரி. ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
அதனைத் தொடர்ந்து  வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,  ரஜினி முருகன் ,  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்  உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகவும் உயர்ந்தார்.
 
ஒரு கட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களை தாண்டி கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கிய சூரிக்கு, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை  திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, சூரியை வேறு கோணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
 
அதன்பிறகு  விடுதலை 2 ,  கருடன் ,  மாமன்  உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூரி, வாழ்க்கையில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.
 
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். அம்மா, மகள், சகோதரி என எந்த உறவாக இருந்தாலும் பெண்கள் இல்லாமல் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிக்கு முழுமையான அர்த்தம் இருக்காது என்று சூரி தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து  பேசிய அவர்,  சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி என்பார்கள். ஆனால் பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி  என்று கூறியுள்ளார்.
 
பெண்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு சூரி பேசிய இந்த கருத்து, நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தியதோடு, தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது. அவரது பேச்சை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், சூரியின் இந்த நகைச்சுவை கலந்த கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் மாதவனின் ஜி.டி.என்