1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today share market sensex and nifty status

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்கள்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இந்த வாரம் சரிவில் இருந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்தோம்.

ஆனால் நேற்று சிறிய அளவில் பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்று திடீரென 400 புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது  முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 810 என்ற  புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி125 புள்ளிகள் உயர்ந்த 21,643 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  

பங்குச்சந்தை ஓரிரு நாட்கள் சரிந்தாலும் மீண்டும் ஏற்றத்தில் வந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது


Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சர்ச்சை பேச்சு..! பி.கே.ஹரிபிரசாத்தை கைது செய்ய கோரிக்கை..!!