தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களின் நிலை என்ன?
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக படுமோசமாக சரிந்து வந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் உயர்ந்திருந்தாலும், அதன் பின் திடீரென மோசமாக சரிந்தது என்பதும், வர்த்தகத்தின் முடிவில் 600 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை உயர்ந்திருந்தாலும், சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்திருப்பதால், இன்றும் நேற்றைய நிலை போல் மாறிவிடுமா என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 88 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 81,500 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 13 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 24,010 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva