செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (10:05 IST)

நேற்றைய பயங்கர சரிவுக்கு இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

share
இந்திய பங்குச்சந்தை நேற்று மிக மோசமான இறக்கத்தின் பின்னர், இன்று பங்குச்சந்தை சற்றே உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றம் காரணமாக, நேற்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது. சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 65 புள்ளிகள் உயர்ந்து 8,2515 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 25,222 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.

இன்றைய பங்குச்சந்தையில், Axis Bank, HCL Technologies, IndusInd Bank, Infosys, ITC போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன. அதேசமயம், Asian Paints, Bajaj Finance, Bharti Airtel, HDFC Bank, Hindustan Unilever, ICICI Bank போன்ற பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva