வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2024 (11:07 IST)

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி; படு பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை..!

இஸ்ரேல் மற்றும் ஈரான் போரின் காரணமாக பங்குச்சந்தை சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்துள்ளதாக வெளிவந்த தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், உலக நாடுகளில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், சரிவிலிருந்து தப்பிய நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 960 புள்ளிகள் சரிந்து, 83,338 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 296 புள்ளிகள் சரிந்து, 25,500 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல், அல்ட்ரா சிமெண்ட் போன்ற சில பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva