வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (10:07 IST)

600 புள்ளிகளுக்கு மேல் திடீரென சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் 600 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்து உள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 662 புள்ளிகள் சரிந்து 84,912 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
அதே போல், தேசிய பங்கு சந்தை 184 புள்ளிகள் சரிந்து 25,095 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும், பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி, வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva