1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay visited kolluur mookambikai temple

மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்!.. ஒரு கிலோ வெள்ளி வாளை பரிசளித்த விஜய்!...

vijay
தமிழக முதல்வர் விஜய் மூன்று நாள் அரசு பயணமாக கடந்த 10ம் தேதி டெல்லி கிளம்பி சென்றார். அங்கு ஜனாதிபதி துணை, ஜனாதிபதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அவர் சந்தித்து பேசினார்.
 
மேலும் நேற்று காலை பிரதமர் மோடி நடத்திய நிதி ஆயோக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். அப்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில முக்கிய விஷயங்களை விஜய் அந்த கூட்டத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று காலை டெல்லியிலிருந்து கர்நாடகா சென்ற முதல்வர் விஜய் அங்கு கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த போது ஒரு கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாளை விஜய் காணிக்கை செலுத்தினார். 
 
தேர்தலுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஆந்திராவில் உள்ள சாய்பாபா கோவிலுக்கும் விஜய் சென்று வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் விஜயதாரணி!..