திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (10:54 IST)

ஹரியாணாவில் இழுபறி; தொங்கு சட்டசபையா? ஜம்மு - காஷ்மீரில் காங். கூட்டணி முன்னிலை!

Election Commision
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் 36 இடங்களிலும், பாஜக 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இங்கு 46 தொகுதிகள் ஆட்சி அமைக்க தேவைப்பட்டுள்ள நிலையில், இதர கட்சிகள் முன்னிலையில் இருக்கும் ஐந்து எம்எல்ஏக்கள் ஆட்சியை நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, இந்தியா கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலையில் இருப்பதால், அங்கு கிட்டத்தட்ட ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக வெறும் 22 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பதும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில மணி நேரங்களில், ஹரியானாவில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran