1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today petrol and diesel rate at Chennai

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னை
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.


அந்த வகையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனஇதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
61.95 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!