வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:38 IST)

பிளைவுட் கடைகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

மேட்டுப்பாளையம் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.


கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் நேற்றிரவு மதன்குமார், சச்சின் உள்ளிட்ட இருவருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளை பணி முடிந்து மூடி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பணியாளர்கள் அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் வெளியே நின்றவாறு  உள்ளே பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் திரியை வைத்து தூக்கி வீசியுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை சில பிளைவுட்களும் எரிந்துள்ளன. பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.