தொடர்புடைய செய்திகள்
- சென்னை சிக்னல்களில் டெசிபல் மீட்டர்.. ஒலி மாசு அதிகரித்தால் உடனே தண்டனை..!
- சென்னையில் சைக்கிள்களையும் காணவில்லை.. சைக்கிள் பாதைகளையும் காணவில்லை.. முதல்வருக்கு அன்புமணி பதில்..!
- சென்னையில் நாம் ஒன்றாக சைக்களில் பயணிப்போம்.! ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்..!
- வேலை தேடி சென்னை வந்த கேரள காதல் ஜோடி.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!
- விநாயகர் சதுர்த்தி விடுமுறை: 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!
ஒரே இடத்தில் நிற்கும் தங்கம், வெள்ளி விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?
தங்கம், வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக மாற்றம் இன்றி விற்பனையான நிலையில் இன்று நான்காவது நாளிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சில நாட்களுக்கு மாற்றம் இருக்காது என்றும் எனவே தங்கத்தை சேமிக்க இது சரியான நேரம் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
