வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (17:07 IST)

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை ஒட்டி நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 8-ம் தேதி நான்கு நாட்களுக்கு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 725 பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 190 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.  

Edited by Mahendran