ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (17:13 IST)

வேலை தேடி சென்னை வந்த கேரள காதல் ஜோடி.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

கேரளாவில் இருந்து காதல் ஜோடி வேலை தேடி சென்னைக்கு வந்த நிலையில் சென்னையில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி இருவரும் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த முகமது ஷரீப் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் காதல் ஜோடிகள் என்ற நிலையில் இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில் கூடுவாஞ்சேரி  -- பொத்தேரி இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் மோதியதால் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முகமது ஷரீப் பலியானதாகவும் ஐஸ்வர்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் ஒரு சில மணி நேரங்களில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இறந்த ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran