செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (21:53 IST)

சென்னையில் நாம் ஒன்றாக சைக்களில் பயணிப்போம்.! ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்..!

Stalin Raghul
அன்புச் சகோதரர்  அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம்  என்று ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
 
சிகாகோவில் மிதிவண்டியில் பயணம் செய்த வீடியோவை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதைப் பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சகோதரரே! நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்?” எனக் கேட்டுப் பதிவிட்டிருந்திருந்தார்.
 
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.