1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தொடர் சரிவில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்து சில நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி விற்பனையாகி வருகிறது என்பதும் ஜூலை முதல் தேதியில் இருந்து 6600 முதல் 6800 வரை வெறும் 200 ரூபாய் வித்தியாசத்தில் தான் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   6,760 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 54,080 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,230 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
புதின் உங்க ஃப்ரெண்டுதானே.. போரை நிறுத்த சொல்லுங்க! - பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வேண்டுகோள்!