தொடர்புடைய செய்திகள்
- சென்னை மக்களே! ஒரு டிக்கெட் போதும்.. பேருந்து, மெட்ரோ எல்லாத்திலும் பயணிக்கலாம்! – ஹேப்பி அறிவிப்பு!
- அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
- கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை
- புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!
- தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்தது போல் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 6,770 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 54,160என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,240 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
