செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (10:09 IST)

சென்னை மக்களே! ஒரு டிக்கெட் போதும்.. பேருந்து, மெட்ரோ எல்லாத்திலும் பயணிக்கலாம்! – ஹேப்பி அறிவிப்பு!

Chennai One Ticket

சென்னை மாநகர் முழுவதும் ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான போக்குவரத்துகளிலும் பயணிக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

நாளுக்கு நாள் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் அதேசமயம் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு மாநகர பேருந்து, மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் என இந்த மூன்று வகை போக்குவரத்துகளையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வர பேருந்தில் சென்று, மெட்ரோவில் மாறி செல்வது உள்ளிட்ட வகையிலும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் ஆங்காங்கே டிக்கெட் எடுக்க வேண்டிய சிரமத்தை குறைக்கும் வகையில் சென்னை மெட்ரோ, மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் என மூன்று வகை போக்குவரத்தையும் ஒரே டிக்கெட்டில் மேற்கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

இதற்கான செயலியை உருவாக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் Moving Tech Innovations Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் முதல் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் குறைகள் அப்டேட் செய்யப்பட்டு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K