1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (07:12 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி தென் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்று பகல் நேரத்திலேயே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  மேலும் மழை நேரத்தில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva