1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (10:15 IST)

திடீரென சென்னை வந்த அதானி.. 5 மணி நேரத்தில் கிளம்பி சென்றதால் பரபரப்பு.. என்ன காரணம்?

பிரபல தொழிலதிபர் அதானி நேற்று மாலை சென்னை வந்த நிலையில் ஐந்தே மணி நேரத்தில் உடனே அவர் மீண்டும் அகமதாபாத் கிளம்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி நேற்று மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்ய வந்திருப்பதாகவும் ஓரிரு நாட்கள் அவர் சென்னையில் தங்கி இருப்பார் என்றும் கூறப்பட்டது.
 
ஆனால் திடீரென ஐந்து மணி நேரத்தில் அதாவது இரவு 10.40 மணிக்கு அவர் சென்னையில் இருந்து தனி விமானத்தில் அகமதாபாத் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த எதற்காக அவர் சென்னை வந்தார்? ஐந்து மணி நேரம் மட்டுமே அவர் இருந்தது ஏன்? இந்த ஐந்து மணி நேரத்தில் அவர் என்ன செய்தார் என்ற தகவல் எதுவும் தெரியாமல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தபோது அதானி குழுமம் சார்பில் 4000 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போவதாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. இந்த நிலையில் அது சம்பந்தமாக தான் அதானி சென்னை வந்திருப்பார் என்றும் இந்த ஐந்து மணி நேரத்தில் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran