ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (11:56 IST)

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. நேரில் சந்தித்து ஆறுதல்..!

MK Stalin
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியை சந்திக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை பார்வையிட்ட போது உணவு டெலிவரி செய்பவர்கள் போல வந்த ஆறு மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். 
 
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்கு வருகை தந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் இறுதி சடங்கு முடிவடைந்த நிலையில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்  மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்
 
Edited by Mahendran