1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம்.. மீண்டும் ரூ.54,000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து மீண்டும் சவரன் 54 ஆயிரத்தை தாண்டி உள்ளத்தை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,755 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 அதிகரித்து   ரூபாய் 54,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,225 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக நீர் மோர் பந்தல்:முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தொடங்கி வைத்தார்!