வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:44 IST)

அதிமுக நீர் மோர் பந்தல்:முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தொடங்கி வைத்தார்!

அதிமுக நீர் மோர் பந்தல்:முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தொடங்கி வைத்தார்!
மதுரை,சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமி,  அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  ,கருப்பையா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.