1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம் என்ன?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில். சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றாலும் வெள்ளி விலை ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி  ஒரு கிராம் ரூபாய் 6,870 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  54,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,340 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்திய பங்குச்சந்தை இன்று விடுமுறை.. என்ன காரணம்?