1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. கிட்டத்தட்ட ரூ.55,000ஐ தொட்டுவிட்டதால் அதிர்ச்சி..!

சென்னை
தங்கம் விலை நேற்று இறங்கிய நிலையில் இன்று திடீரென இறங்கிய வேகத்தில் ஏறி உள்ளது என்பதும் கிட்டத்தட்ட 55 ஆயிரத்தை ஒரு சவரன் தொட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 520 ரூபாய் இறங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 640 உயர்ந்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 960 என விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,870 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 54,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,340 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 90.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தால் இன்னும் சரிய வாய்ப்பா?