1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:24 IST)

அக்கா '1825 என்ற பெயரில்' தேர்தல் அறிக்கை...!!

Tamilasai
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், அக்கா 1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான நாட்களைக் கணக்கிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை தற்போது 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்ளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு 365 நாள்கள் என்று கணக்கிட்டு 1825 நாள்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தேர்தல் அறிக்கையை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
 
போக்குவரத்து நெரிசல் போன்ற தென் சென்னையின் முக்கிய பிரச்னைகள் குறித்து அலசி, அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் அதில் உறுதிமொழி அளித்துள்ளார். தேர்தல் அறிக்கையில்,சென்னைக்கு கோதாவரி ஆற்றுநீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் உள்ளிட்ட இடங்கள் உள்பட மொத்தம் 25 நீர்நிலைகள் தூர்வாரப்படும், மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
 
மேலும் ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும், சைதாப்பேட்டை, மாம்பலம் ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும், நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும், ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும், ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கான பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
 
ஆண் பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும், தென் சென்னை முழுவதும் 18 பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும், பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும், போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையம் ஒன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.