தொடர்புடைய செய்திகள்
- தங்கம் போலவே உச்சம் செல்கிறது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
- 2வது நாளாக உயரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?
- 4 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 குறைவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தங்கம் விலை இன்று குறைவு.. ஆனால் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அதிர்ச்சி..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.760 உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 35 ரூபாயும் ஒரு சவரனுக்கு 280 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் ரூபாய் 49,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6670 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 200 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 79.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
