செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (10:47 IST)

4 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை சரிந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 2000 ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கம் விலை ஏறி உள்ளது என்பதை பார்த்தோம்

அதுமட்டுமின்றி ஒரு கிராம் 6150 என 6000க்கு மேல் தாண்டியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலைக்கு வரும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 49,080 என ஒரு சவரன் விற்பனை ஆன நிலையில் இன்று அதாவது மார்க் 19ஆம் தேதி அதே விலைக்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ளது  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,135 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 49,080  என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6605 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 80.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,300.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva