1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status

திடீரென 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது சரிவில் இருந்த நிலையில் சற்றுமுன் இந்திய பங்குச் சந்தை 535 புள்ளிகள் சரிந்து 64 ஆயிரத்து 976 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி  160 புள்ளிகள் சார்ந்து 19,368 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மனைவி பெயரில் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை.. நிர்மலா சீதாராமன் முன் பிரச்சனை செய்தவர் மீது குற்றச்சாட்டு..!