மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்.!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அதிக அளவில் சரிந்து வருவதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று பங்கு சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இறுதியில் வெறும் 14 புள்ளிகள் மட்டும் உயர்ந்து பங்குச்சந்தை வர்த்தக முடிவடைந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து 65,965 என்ற புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.
அதேபோல் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 19,668 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பங்குச் சந்தையில் மணப்புரம் பைனான்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் ஹெச்டிஎஃப்சி வாங்கி வோடபோன் ஐடியா ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாக தெரிகிறது
அதேபோல் ஆசியன் பெயிண்ட்ஸ், பர்கர் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva