1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (15:40 IST)

மனைவி பெயரில் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை.. நிர்மலா சீதாராமன் முன் பிரச்சனை செய்தவர் மீது குற்றச்சாட்டு..!

மனைவி பெயரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் புதிதாக ரூ.40 லட்சம் கடன் தர முடியாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே சம்பந்தபட்ட நபருக்கு கடிதம் வங்கியால் அனுப்பபட்டுள்ளது. ஆனால் அதை மறைத்து விட்டு மத்திய நிதியமைச்சரின் நிகழ்ச்சியில் பிரச்சனை செய்துள்ளார் சதீஷ் என்று பாஜக தெரிவித்துள்ளது.
 
 நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது சதீஷ் என்பவர் தனக்கு வங்கி கடன் தரவில்லை என்று புகார் கூறினார். 
 
அவரை மேடைக்கு வருமாறு மதிய அமைச்சர் அழைத்த நிலையில் அவரைப் பேசுமாறு கூறினார். அப்போது தான் அனைத்து ஆவணங்களையும் தர தயாராக இருந்தும் வங்கி தனக்கு கடன் தரவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்தார். 
 
இதுகுறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி கூறினார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சதீஷ் என்பவர் தனது மனைவி பெயரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும், அதனால் தான் அவருக்கு வங்கி கடன் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran