1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 698 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 68 புள்ளிகள் குறைந்து 19,596 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தடன் இருந்து வருவதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும்  கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் தகுந்த ஆலோசனை பெற்ற பின்னரே சரியான நேரம் வரை காத்திருந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு