ஜியோவின் ஐபிஓ இன்று ஒதுக்கீடு.. 00-இல் 70 பேருக்கு 1 லாட் பங்கு கிடைக்க அதிக வாய்ப்பு...
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ரூ. 30,213 கோடி மதிப்பிலான பங்கு வெளியீட்டில் பங்குகளின் ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்த ஐபிஓ ஒட்டுமொத்தமாக 22.19 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தாலும், சில்லறை முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக 22.19 மடங்கு என்ற எண்ணிக்கை பெரிய நிறுவனங்களின் முதலீடுகளால் உயர்த்தப்பட்டதாகும். நிறுவனங்களுக்கான பகுதி 70.55 மடங்கும், உயர் மதிப்பு முதலீட்டாளர்களுக்கான பகுதி 14 மடங்கும் பெறப்பட்டுள்ளன. ஆனால், சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 8.5 கோடி பங்குகள் 2.72 மடங்கு மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
செபியின் விதிமுறைகளின்படி, சில்லறை பிரிவில் அதிக விண்ணப்பங்கள் வரும்போது கணினி மூலம் குழுக்கல் முறையில் பங்குகள் ஒதுக்கப்படும். ஜியோவின் 1 லாட் என்பது 12 பங்குகள் (ரூ. 13,428) ஆகும். மொத்தம் பெறப்பட்ட சுமார் 1 கோடி சில்லறை விண்ணப்பங்களின் அடிப்படையில், 100-இல் 70 பேருக்கு 1 லாட் பங்கு கிடைக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
தவிர, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கான தனி ஒதுக்கீடு 7.60 மடங்கும், ஊழியர்களுக்கான ஒதுக்கீடு 2.93 மடங்கும் பூர்த்தியாகியுள்ளன. முதலீட்டாளர்கள் KFin Technologies வலைத்தளத்தில் தங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி ஒதுக்கீடு நிலையைச் சரிபார்க்கலாம்.

