1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate increases today

தீபாவளியை முன்னிட்டு உயர்ந்த தங்கத்தின் விலை!

Gold Rate
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனை.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.  
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் ரூ.27 உயர்ந்து ரூ.4,788-க்கு விற்பனை ஆகிறது. 
அடுத்த கட்டுரையில்
ஐந்தே மணிநேரம்… 5 கோடிக்கு வியாபாரமான ஆட்டுச்சந்தை – எங்கு தெரியுமா?