செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:41 IST)

அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை ! தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி!

நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய தங்கப்பத்திரம் என்று சொல்லும் முதலீடு முறையை இந்திய அரசு செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு நபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரையிலான தங்கத்துக்கான இன்றைய சந்தை மதிப்பில் பணம் கொடுத்துவிட்டு அதற்கான பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தங்களுக்கு தேவைப்படும்போது பத்திரத்தைக் கொடுத்து அன்றைய மதிப்பிலான தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தை மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தை விற்பனை செய்துள்ளது. இந்த தங்க பத்திரங்களை வாங்க நவம்பர் 13 ஆம் தேதியே கடைசி தேதியாகும்.