ஒரே நாளில் 1200 ரூபாய்க்கு மேல் குறைந்த தங்கம் விலை! மக்கள் நிம்மதி!

Last Updated: செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:19 IST)

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை இன்று ஒரேயடியாக சவரனுக்கு 1248 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 1248 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் இன்று ₹4766 ஆகவும், ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையைவிட 1248 ரூபாய் குறைவாகும்.இதில் மேலும் படிக்கவும் :