வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:00 IST)

ஐந்தே மணிநேரம்… 5 கோடிக்கு வியாபாரமான ஆட்டுச்சந்தை – எங்கு தெரியுமா?

கடலூர் மாவட்ட்த்தில் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச்சந்தையில்  கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் பகுதி வாரச்சந்தை ஆட்டுச்சந்தைக்கு பிரபலமானது. அருகாமை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எல்லாம் இந்த ஆட்டுச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி மற்றும் விற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சந்தை இன்று போடப்பட்டது. அதில் 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 7000 ஆடுகள் வரைக் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.